ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவில் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் உள்ளடக்கப்பட உள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடாத்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரினால் விசேட நிபுணர் குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளது.
இந்தக் குழுவில் அங்கம் வகிக்கும் இரண்டு பேர், புலிகளுடன் நெருக்கமான உறவுகளைப் பேணியவர்கள்.
இந்தக் குழுவினர் மே மாத நடுப்பகுதியில் அல்லது ஜூன் மாதத்தில் விசாரணைகளை ஆரம்பிக்க உள்ளனர்.
நிபுணர் குழுவின் ஒருவர் சியரே லியோ போர்க் குற்றச் செயல்கள் விசாரணைகளில் பங்கேற்றவர் எனத் தெரிவிக்க்பபடுகிறது.
ஓராண்டு காலத்திற்குள் இந்த விசாரணைகள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.
எனினும், விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லை என அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.