எம்எச்370 காணாமல்போனதில் அமெரிக்காவின் மத்திய உளவுத் துறை(சிஐஏ)க்குத் தொடர்புண்டு என்று சொல்லப்படுவதை இடைக்காலப் போக்குவரத்து அமைச்சர் ஹிஷாமுடின் உசேன் புறந்தள்ளினார்.
“அது உண்மையாயின் இங்கு இவ்வளவு பெரிய அமெரிக்க பிரசன்னம் இருக்காது”, என்று ஆசிய தற்காப்புச் சேவைக் கண்காட்சியைச் சுட்டிக்காட்டி அவர் கூறினார்.
எம்எச்370 காணாமல் போனதில் சிஐஏ-க்குத் தொடர்புண்டு என உத்துசானில் கூறப்பட்டிருந்தது பற்றி வினவப்பட்டதற்கு அமைச்சர் இவ்வாறு கூறினார்.
“மேலைநாட்டு ஊடகங்களைப் போல எதைச் சொல்ல நினைக்கிறார்களோ அதைச் சொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு.
“அவர்கள் சொல்வது பொய்யாக இருந்தால், அவர்கள்தான் நம்பகத்தன்மையை இழப்பார்கள்”, என்றாரவர்.
உத்துசான் சொல்லுவதில் உண்மை இருக்க வேண்டும்! உண்மையைத் தவிர வேறு எதையும் அவர்கள் சொல்லுவதில்லை. அவர்களின் நம்பகத்தன்மையை ஊரே அறியும்! சிஐஏ யூதர்களின் உளவுத்துறை ஆயிற்றே!
“மேலைநாட்டு ஊடகங்களைப் போல எதைச் சொல்ல நினைக்கிறார்களோ அதைச் சொல்லும் உரிமை அவர்களுக்கு உண்டு” அருமையான வாசகம் ; அப்படியானால் ” MH 370 ” சீன பயணிகளின் உறவினர்கள் மலேசியாவை (குறிப்பாக மலேசியாவை ஆளும் BN அரசாங்கத்தை) பொய்யர்கள் மற்றும் கொலையாளிகள் என்று கூறுவதை, மலேசியர்களும் சீன பயணிகளின் உறவினர்களுக்கு ஆதரவு நல்கவும் உரிமை உண்டு என்று எடுத்து கொள்ளலாமா ???
இனி மெனுன்ஜோக்கான் பெர்லாக்கூ பெராங் குவாசா டாலாம் பி.என்.வாழ்க நாராயண நாமம்.