சர்வதேச பொலிஸ்காரனாக அமெரிக்கா செயற்படுவதை இலங்கை அனுமதிக்காது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த யோசனை நிறைவேற்றப்பட்டதன் பின்னர், ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு ஒன்று இலங்கைக்கு சென்று விசாரணைகளை நடத்த எதிர்பார்த்துள்ளது.
எனினும் இந்த நிபுணர் குழுவின் நியமனம் இலங்கையின் இறைமைக்கு எதிரான ஒன்று. அத்துடன் இலங்கையின் கொள்கைக்கு அது முரணானது. எனவே எந்த ஒரு ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவுக்கும் இலங்கை அனுமதிதராது.
அத்துடன் அதன் செயற்பாடுகள் குறித்தும் அவதானமாக செயற்படும். இந்த விசாரணைக் குழுவின் முன்னால் சாட்சியங்கள் கூறுவது இலங்கையை பொறுத்தவரையில் குற்றமாகும்.
எனவே குறித்த குழுவிடம் சாட்சியமளிக்கும் இலங்கையர்கள் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவர் என்று அமைச்சர் எச்சரிக்கை விடுத்தார்.
இந்தநிலையில் நாடுகள் இலங்கை மீது பொருளாதாரத் தடையை ஏற்படுத்துமானால் அதனை நீதியின் முன் வெற்றி கொள்ள இலங்கை தயாராக உள்ளதாகவும் கெஹலிய ரம்புக்வெல குறிப்பிட்டார்.