பிகேஆர் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் அப்துல் காலிட் இப்ராகிம், கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து அன்வார் இப்ராகிமை அகற்றும் நேரம் வந்துவிட்டதாகக் கூறப்படுவதை ஏற்கவில்லை.
“அதற்கு இது நேரமும் அல்ல, அது கட்சிக்கு நல்லதுமல்ல”, என்று நேற்று அவர் செபராங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.
காலிட், கட்சி உறுப்பினர்களைச் சந்திப்பதற்காக பினாங்கு சென்றிருந்தார்.
“நிலைமையை விவேகத்துடன் ஆராய வேண்டும். தலைவரை ஒதுக்குவது முக்கியமல்ல. அவருடன் சேர்ந்து மேலும் வலுவான பிகேஆரை உருவாக்குவதுதான் முக்கியம்”, என்றாரவர்.
எறும்பு மேதிச்சி யானை சாகுமா?யானை இல்லை என்றால் அங்கே பலம் இல்லை தெரிந்து கொள்ளுங்கள்.
லூ ஓராங் சுடா வூசேக் காலிட்,செகாராங் டீயா சூடா கீலா.சியாப்பா தாக் புவாஸ் ஆத்தி போலே சாமான் செலாங்கூர் பாசால் தியாடா ஆயெர்.நாராயண நாராயண.