சர்வதேச விசாரணை வரும் ஜூன் மாதமே நடைபெறும்!- கொழும்பு ஆங்கில வாரஇதழ் தகவல்

bankimonஇலங்கையில் போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றச்சாட்டுகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக ஐ.நா வில் முன்மொழியப்பட்டுள்ள சர்வதேச விசாரணைகள் வரும் ஜூன் மாதம் ஆரம்பிக்க உள்ளதாக ஐ.நா உயர்அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்த விசாரணையை மேற்கொள்வதற்குத் தேவையான பொறிமுறை பற்றிய தெளிவற்ற நிலை காணப்படுகிறது.

இந்த நிலை மே மாத இறுதியிலேயே முடிவுக்கு வரும்.

அதன்பின்னரே முழு அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் கொழும்பு ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஐ.நாவின் இந்த விசாரணை முயற்சிகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருப்பதுடன், அதற்கு அயல்நாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும், இலங்கைக்கு பலத்த ஆதரவை வழங்கி வருகின்றன.

அதேவேளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் விசாரணைகளுக்கு. இலங்கை அரசாங்கம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் கேட்டுக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

TAGS: