இலங்கையில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகள் குறித்து திருப்தியடைய முடியாது என பிரிட்டன் அமைச்சர் ஷுகோ ஸ்வாயர் தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைகளில் சிறிதளவு முன்னேற்றமே ஏற்பட்டுள்ளது.
எனினும் உரிய முறையில் விசாரணைகள் நடத்தப்படவில்லை.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஊடாக இலங்கை விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணை நடாத்தும் முயற்சியில் பிரிட்டன் பிரதமர் முக்கிய பங்காற்றினார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பு கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டும். பொதுபலநாய நாடுகள் பிரகடனங்கள் அமுல்படுத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கிலாஸ்கோவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளமையை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.