மசீச, டிஏபி, மஇகா ஆகியவையும் கிழக்கு மலேசிய கட்சிகளும் ஜனநாயகத்தையும் சட்ட ஆளுமையையும் விரும்பும் மலாய்க்காரர்களுடன் சேர்ந்து ஒரு புதிய கூட்டணியை அமைக்க வேண்டும் என்று முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம் முகநூலில் குறிப்பிட்டுள்ளார்.
“நம் நாடு சமயச் சார்பற்றது. அப்படியேதான் அது தொடர்ந்து இருக்க வேண்டும்” என்றாரவர்.
ஜைட் தம் வலைப்பதிவில், தீபகற்ப முஸ்லிம் தலைவர்களையும் கடுமையாக சாடினார். அவர்கள் செய்ய வேண்டியதைச் செய்யத் தவறியதுதான் நாட்டின் இன்றைய நிலைக்குக் காரணமாகும்.
அம்னோ, பாஸ் கட்சிகளில் உள்ள முஸ்லிம் தலைவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் சமயச் சார்பற்ற ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில்தான் நாடு நிறுவப்பட்டது என்பதை ஒப்புக்கொள்ள விரும்புவதில்லை என ஜைட் கூறினார்.
சமய சார்பற்ற மலேசியாவை உருவாக்க விரும்பும் ஒரு மலாய்க்கார இயக்கமோ அல்லது கட்சியோ நம் நாட்டில் கிடையாதா? ஒன்றைக் கூட உங்களால் குறிப்பிட இயலவில்லையே, முன்னாள் சட்டத்துறை அமைச்சரே!
சமயமற்ற நாடு,சைட்க்கு என்னவாச்சு அப்படியென்றால் முதலில் சமயம் சார்ந்த பள்ளிகளை முதலில் இடித்து தல்லவேண்டும்.ஆங்கிலேயர் சட்டத்தை மட்டும் பயன்படுத்த வேண்டும்,பெயர்களை ஆங்கிலேயர் பெயறுக்கு மாற்றவேண்டும் ஆலயம்,மசூதி,தேவாலயம் எதுவும் கூடாது.என்னப்பா சைட்,மூட்டை பூச்சிக்கு பயந்து வீட்டை கொழுத்துவதா?,,சாபார் சைட் சபார்,நாராயண நாராயண.