தம் ஆறு-வயது மகனை ஒரு இந்துவான முன்னாள்-மனைவியிடலிருந்து கடத்திச்சென்ற முஸ்லிமாக மதமாறிய ஒரு தந்தைக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் எனக் கூறிய உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை மஇகா இளைஞர் தலைவர் சி.சிவராஜா கடிந்து கொண்டார்.
“உள்துறை அமைச்சரின் பொறுப்பற்ற அறிக்கை கண்டு அதிர்ச்சி அடைவதாக”, அவர் சொன்னார்.
“உள்துறை விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் இப்படியொரு நொண்டி அறிக்கை விடுத்து விவகாரத்தைக் கைகழுவுவது கூடாது”, என சிவராஜா இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.
இதனால் தெரிவித்து கொள்வது என்னவென்றால், மஇகாவினர் யாரேனும் உள்துறை அமைச்சர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடியை அறைந்தால் MYR 5,001/= பரிசு வழங்கப்படும். டும் !!! டும் !!! டும் !!!
ஷபாஸ்….
தட்டி கேட்க வேண்டியதை கெஞ்சி கேட்பது, மக்களிடம் மா இ கா தனது கடமையை செய்தாகி விட்டது என நடிப்பதை விடுத்து தம்பி சிவராசா உங்கள் பெரியப்பா அவர்தான் மாவு பல்லன் திறந்தால் வாய் நாறும் என்று இது வரை எதுவுமே பேசாமல் இருகிராரே, நல்ல பற்பசையாழ் துலக்கி விட்டு அம்னோ காலில் விழுந்து கெஞ்ச சொல்.
ம.இ.கா. ஒரு செத்த பாம்பு. அதே வேலை, அவ்வப்போது ஓரிருவர் குரல் எழுப்பவதுண்டு. அவர்கள் புரியும் நல்ல விஷயங்களை நாம் பாராட்டியே ஆகவேண்டும். சிவராஜாவுக்கு எனது பாராட்டுக்கள்.
ஹல்லோ மஇக ..,அறிக்கை விடுவதைவிட…, செயலில் காட்டு!!!!
அட பரவாஇல்லயெ மக்கி இத்து போன கட்சி ம இ க கூட கோபம் வருகிறதே
ஏன் நம்மவர்களுக்கு இந்த காட்டிக்கொடுக்கும் புத்தியும் துதி பாடும் புத்தியும் அதிகம்? தெய்வ புலவர்கள் அவ்வையும் திருவள்ளுவரும் மற்றும் மா கவி பாரதி பெரியார் வழி வந்த நம் இனம் ஏன் இவ்வளவு கேவலமாகி இந்த இழி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது? எட்டப்பன் முதல் ஈழ கருணா இங்குள்ள MIC வரை நம்மினம் முதுகு எழும்பில்லா மானம் ஈனம் சூடு சொரணை இல்லா இனமாகிவிட்டது.
நிமிர்ந்து கேட்டாலும் குற்றம்.. வாயை மூடி கொண்டிருந்தாலும் குற்றம்…நமது தமிழர்களின் பிரிவினைக்கு இப்படி பட்டவர்கள் தான் காரணம்…கேள்வி கேட்பது யாராகினும் அவருக்கு ஆதரவு தெரிவிப்பது இன ஒற்றுமைக்கு அழகு…தன் இனத்தையே குறை கூற நாவிருக்கும் சிலர்…கட்சியால் வேறுபடாமல் ஓரே குரலாய் ஒன்று பட்டால் நாளைய தலைமுறைக்கு வழிகாட்ட உதவும்….இங்கே யார் கேட்கிறார் என்பது முக்கியமல்ல..எதற்கு கேட்கிறார் என்று சிந்தித்து பாருங்கள்….வாழ்த்துக்கள் சகோதரர் சிவராஜ் அவர்களே….
சகோதரர் சிவராஜ் அவர்களின் இந்த முயர்ச்சி வெற்றியடைய எனது வாழ்த்துகள்…..
பூ………! இதைத்தானே நாங்கள் தினம் தினம் சொல்லிக்கொண்டிருக்கிறோம்! நீங்கள் எங்களைப் போல இப்படி சொன்னால் எப்படி! அதுவும் இத்தனை நாள் ஒளிந்து, பயந்து , ஏதாவது சொல்லுவார்களே என்று கலங்கி, இப்போது சொல்லுகிறீர்களே! ஆனால் இந்த செய்தி தமிழ்ப் பத்திரிக்கைகளுக்கு மட்டும் தானே! மலாய் பத்திரிக்கைகளுக்குப் போய் சேராதே! செனட்டர் பதவி கிடைக்காது ஜாக்கிரதை!
இது என்ன புது வித வித்தையாக இருக்கிறது ,எதற்கெடுத்தாலும் ம இ கா இளைஞ்சர் பகுதியை விட்டு கண்டனம் தெரிவிப்பது ,அந்த கட்சியின் தலைமையின் நிலைபாடு என்ன ,அதன் தேசிய தலைவர் ,உள்துறை அமைச்சருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவிப்பாரா ?ஒட்டு மொத்த இந்தியர்களின் பிரதிநிதி ம இ கா என்று மார் தட்டி கொண்டால் மட்டும் போதுமா ,மத்திய அரசாங்கத்தின் இந்திய சமுகத்தின் ஒட்டு மொத்த பிரதிநிதி என்று டமார் அடித்து கொண்டு இருப்பது மட்டும் போதாது .கட்சியின் இளைஞ்சர் பகுதிக்கு இருக்கும் துணிவு அதன் தேசிய தலைவருக்கும் .துணை தலைவருக்கும் இல்லை என்பது வேதனை அது மட்டும் இல்லை வெட்க கேடானது .ஒருவகையில் இளைஞ்சர் பகுதியை பாராட்டத்தான் வேண்டும் கட்சியில் இளைஞ்சர் பகுதி மட்டுமே மிக சிறப்பாக இயங்குகிறது என்பது தெள்ள தெளிவாக தெரிகிறது ,ம இ காவின் தலைமை தூங்கிகொண்டு இருப்பது அவமானம் .இந்த மாதிரி பொறுப்பற்ற உள்துறை அமைச்சரை தகுதிஅற்ற அமைச்சரை உடனடியாக நீக்க ம இ கா பிரதமருக்கு கடிதம் எழுதுமா .இல்லை இந்த உள்துறை அமைச்சரின் கருத்துக்கு ம இ கா தலைவர் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பாரா ? பாதிக்க பட்டது ஒரு இந்திய பெண் ,ம இ கா ஒட்டு மொத்த இந்தியர்களின் காவலன் தானே .தீபாவும் இந்திய பெண்தான் அவருக்கு ம இ கா தலைமை காவலனாக இருக்குமா ?
நேற்று மஇக மகளிர் தளையவி குரல் கொடுத்தார் .இன்று ம இக இளைஜர் பகுதி தலைவர் சிவராஜா நீதிக்கு குரல் கொடுக்கிறார் .நாளை பாரிசன் கட்சியை சேர்ந்த இந்தியா தலைவர்கள் நீதிக்காக குரல் கொடுபர்கள ,, அவர்கள் மஇக பழனிவேல் ppp கேவியஸ் மக்கள் சக்தி தனேந்திரன் tIPF சம்பந்தன் MIPP நல்lலகருப்பன் மற்றும் நீதிகட்ச்சi கிருஷ்னன் .,அபபடி இல்லையென்றால் இவர்கள் தான் நமது சமுதாயதின் துரோகி .
பொசுக்குனு போன பலுன் காத்துபோல் இருக்க கூடாது மோகனா முனியாண்டியின் கண்டன குரல் ,உடனடியாக தீபாவை சந்தித்து ம இ மகளிர் பகுதி உங்கள் பின்னால் இருக்கிறது ,உங்களுக்கு வேண்டிய அணைத்து உதவியும் ம இ கா மகளிர் பகுதி செய்யும் .உங்கள் போராட்டத்தில் ம இ கா வின் மகளிர் பகுதி பக்கபலமாக இருக்கும் என்று அறிக்கை விட முடியுமா ? சும்மா கண்டனம் தெரிவிக்கிறேன் என்று பத்திரிகை விளம்பரம் செய்வதை விட்டு விட்டு பாதிக்க பாட்டது ஒரு பெண் ஒரு மகளிர் ,அவருக்கு பக்க பலமாக இருந்து சேவை செய்ய வேண்டும் .தீபா என்ற மகளிருக்கு ஆதராவாக ம இ கா மகளிர் அணி களத்தில் இறங்கும் என்று அறிக்கை விட மோகனா முனியாண்டிக்கு துணிவு இருக்கிறதா ?
இந்த நாட்டில் இந்து மதம் இருக்கிறதா? இந்து கோயில்களும் இருக்கிறதா? சந்தேகமாக இருக்கிறது.
ஆகா…..ம.இ.கா இளைஞர் பகுதி கண்டனக்குரல் கொடுத்ததா…..இது இந்த ட்ராமாவின் எத்தனையாவது எப்பிசோட் .