மலேசியாவிற்கு விஜயம் செய்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, அந்நாட்டுப் பிரதமர் நஜீப் ரசாக்கைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தப் பேச்சுவார்த்தை கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் ஆசியா பாதுகாப்பு சேவைகள்- 2014 மாநாட்டின்போது நடைபெற்றதாக மலேசியப் பிரதமர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய மற்றும் அவரது குழுவினருடன் சுமார் 30 நிமிடங்கள் இடம்பெற்ற இப்பேச்சுவார்த்தை தொடர்பான மேலதிக தகவல்கள் உடனடியாக கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.
மலேசிய மண்ணில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளுக்காக வேலை செய்பவர்களைக் கைது செய்ய மலேஷியா, இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து நெருக்கமாக பணியாற்றி வருகிறது.
அண்மையில் திரையிடப்படவிருந்த சனல்-4வின் இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான காணொளி திரையிடப்படுவதைத் மலேசிய அரசாங்கம் தடை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இனம் இனத்தோடுதான் சேரும் என்பது இதுதானோ ???
என்ன முழிக்கிறீங்க ??? நான் குறிபிடுவது கொ……ர கூட்டத்தை !!!