இலங்கை தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளைக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்ட 15 புலி ஆதரவு அமைப்புக்களின் உறுப்பினர்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் நவனீதம்பிள்ளை நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் 1373ம் பிரகடனத்தின் அடிப்படையில் குறித்த அமைப்புக்களை இலங்கை அரசாங்கம் தடை செய்துள்ளது.
எனவே குறித்த அமைப்புக்களைச் சேர்ந்த எவரையும் நவனீதம்பிள்ளையினால் விசாரணைகளில் இணைத்துக்கொள்ள முடியாது.
புலி ஆதரவு அமைப்புக்களைச் சேர்ந்த 44 பேர் இலங்கைக்கு எதிராக சாட்சியமளிக்கத் திட்டமிட்டிருந்தனர்.
இந்த சாட்சியாளர்களில் எவரும் போர் இடம்பெற்ற காலத்தில் இலங்கையில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் பணியகத்தினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் சாட்சியமளிப்போர் தண்டிக்கப்படுவார்கள் என இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.