போரில் இந்தியப்படைகள் பங்கேற்கவில்லை – மறுக்கிறார் சரத் பொன்சேகா

mahinda_fonsekaவிடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில், சிறிலங்கா படையினருக்கு இந்திய இராணுவத்தினர் நேரடியாக உதவி வழங்கியதாகக் கூறப்படுவதை, போருக்குத் தலைமை தாங்கிய சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதி சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார்.  “இது உண்மையல்ல. வேண்டுமென்றே கூறப்பட்ட பொய்போலத் தோன்றுகிறது.

அங்கு எவரது படையினரும் எம்முடன் செயற்படவில்லை.

தரைப் போரில் அங்கு சிறிலங்கா இராணுவம் மட்டுமே சண்டையிட்டது.

அங்கு வெளிநாட்டவர்களே கிடையாது.

அங்கு நாம் எவருடனும் ஒருங்கிணைந்து செயற்படக்கூட இல்லை.

இத்தகைய தகவலைக் கேள்விப்படக் கூட இல்லை.

போரில் சீக்கிய அதிகாரிகளைப் பயன்படுத்த எம்மிடம் எந்த தேவைகளும் இருக்கவில்லை.

எந்த நிலைமைகளைத் தாக்குப்பிடிக்கவும் எம்மிடம் போதிய அதிகாரிகள் இருந்தனர்.

எமக்கு கட்டளையிடுவதற்கு எந்த வெளிநாட்டுத் தளபதியும் தேவைப்படவில்லை.

நிலைமைகளை முற்றாக கையாளத்தக்க நிலையிலேயே நாம் இருந்தோம்.

சில நாடுகள், ஆயுதங்களைத் தந்து உதவின. சிலநாடுகள் உளவுத் தகவல்களைத் தந்துதவின. ஆனால் அதில் இந்தியா அடங்காது.

இந்தியா எங்களுக்கு எந்த தடையையும் செய்யவில்லை, பிரச்சினையையும் தரவில்லை.

நாங்கள் தான் எமது நடவடிக்கையை மேற்கொண்டோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

TAGS: