இன்று அதிகாலை புக்கிட் குளுகோர் எம்பி கர்பால் சிங் கொல்லப்பட்ட சாலை விபத்தில் சம்பந்தப்பட்ட லாரியின் ஓட்டுநர் போதைப் பொருள் உட்கொண்டிருந்தார் என்பது தெரிய வந்துள்ளது.
தொடக்க நிலை ஆய்வுகள் அவரது உடலில் கேன்னபிஸ் இருப்பதைக் காட்டின என்று பேராக் போலீஸ் தலைவர் ஏக்ரைல் சானி அப்துல்லா கூறினார்.
அதை உறுதிப்படுத்துவதற்கு இரண்டாவது ஆய்வு ஒன்றும் செய்யப்படும் என்று கூறிய லாரி ஓட்டுநரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார்.
கர்பால் பயணம் செய்த ஒரு MPV வாகனமான Toyota Alphard அதன் கட்டுப்பாட்டை இழந்து, இடப்பக்கம் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரியின் வலப்பக்கத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது.
விரைவு பஸ் ஓட்டுனர் போதை பொருள் உட்கொண்டிருந்தார்.
லாரி ஓட்டுனரும் போதை பொருள் உட்கொண்டிருந்தார்.
அடுத்து யாரோ ??? உயிர் பலி ஏற்பட்டவுடன் உடனே ஓட்டுனர் போதை பொருள் உட்கொண்டிருந்தார் என்று கூறுவது போலிசுக்கு வாடிக்கையாகி விட்டது.
நல்லவேளை லோரியை தமிழன் ஒட்டவில்லை, ஒட்டி இருந்தால்
mabok என்று சொல்லி இருப்பார்கள்.
aasami சரியா சொன்னிங்க.
சரி
எது எல்லாம் போலீஸ்க்கு சத்துவ சாதாரணம்
இது ஒரு திட்டமிட கொலையா இருக்குமோ ?????????????????,,,,,,,,,,,
இரண்டு உயிர்கள் பலியாகியுள்ளன , லாரி ஓட்டுனர் மீது
அரசாங்கம் எடுக்கும் தண்டனையை மக்கள் எதிர்பார்கிறார்கள் ,விரைவு சாலையில் லாரி ஓட்டுனர்கள் ராஜாக்களாக திகழ்கிறார்கள் ,விபத்து என்றால் ஒருவருக்கு மட்டும் பங்கு
இருபதில்லை ,இருவருக்கும் பங்கு உண்டு ,பின்னால் மோதினால் மோதியவன் மீது தான் குற்றம் என்றால் ,முன்னே சென்றவன் வேண்டும் என்றே பிரேக் போட்டால்
விரவு சாலையில் வேகமாக வருபவன் மோததானே செய்வான் நைனா , இதை ஒரு சாதாரண விபத்தாக போலிஸ் நினைக்க கூடாது இந்த நாட்டின் தலை சிறந்த
அரசியல் வாதி போராட்டவாதியுமான மக்கள் தலைவர் கர்பால் சிங்கை (சிங்கத்தை ) உயிர் வாங்கிய விபத்து ,லாரி ஓட்டுனர் போதையுள் இருந்தார் என்று மழுப்ப வேண்டாம் நைனா .
டிவி ல என்னனன்னா லாரி பாதை மாறி வந்துருச்சுன்னு காட்டுறாங்க,இங்க என்னன்னா இவெங்க போய் லாரில மோடிடங்கன்னு சொல்றாங்க இதுல எதுதான் உண்மை ?
லாரி ஓட்டுனர் மீது நடுநிலையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் . தற்போது ஏற்படும் பெரும்பாலான சாலை விபத்துக்கள் ,குறிப்பாக, கனரக வாகன ஓட்டுனர்களின் கவனக்குறைவே முக்கிய காரணமாக உள்ளது அதோடு, பெரும்பாலோர் சாலை விதிமுறைகளை முறையாக பின்பற்றாதவர்கலாதவர்கலாகவும், போதைப் பொருள் உட்கொல்பவராகவும் உள்ளனர். இதற்கு சாலை போக்குவரத்துத்துறை இன்னும் சற்று கண்டிப்புடன் கூடுதல் சாலை விதிகளை இணைக்க வேண்டும் . மிகவும் அபாயகரமாக வாகனத்தை செலுததி மரணத்தை விளைவிக்கும் ஓட்டுனர்கள் மீது கூடுதல் அதிகபட்ச தண்டனையாக மரணம் தண்டனை வழங்கப்பட வேண்டும் . குறிப்பாக ,மரணத்தை விளைவிக்கும் வாகன ஒட்டுனர்மீது விட்டுக்கொடுக்கும் மனப் போக்கை சட்டத்துறை கடைபிடிக்கக் கூடாது.. இந்த விஷயத்திலாவது சாலை போக்குவரத்துத்துறை கூடுதல் கவனம் செலுத்துமா? அல்லது, வழக்கம் போல , சம்பவத்தின்போது மட்டும் தொலைக்காட்சி பெட்டியோடு அரசியல் வாதி போல தேர்தல் வாக்குறிதி போலாகி விடுமா? பொறுத்திருந்துதான் பார்கனும் …………….???????????????
மலாய்க்கார முஸ்லிம்கள் எது வேண்டுமானாலும் செய்யலாம் – அதைப்பற்றி கேட்க நாதியில்லை — கர்பால் கேள்வி கேட்ட தினால் அவர்க்கு எவ்வளவு தொல்லை?
எனக்கு தெரிந்தவரை இந்தியர்கள் தண்ணி போட்டு விட்டு
சிறப்பாகவே லோரி ஓட்டுகிறார்கள் ,விபத்து இல்லாமல்.
பழக்க தோசமா aasami அவர்களே……!!!
இந்த ஓட்டுனர்களிடையே கஞ்சா அடிப்பது சாதாரணமாகி விட்டது! பொறுப்பற்ற அரசாங்க அதிகாரிகள், பொறுப்பற்ற குடிமக்கள்!