மே முதல் நாள் நடத்தத் திட்டமிட்டுள்ள பொருள், சேவை வரிக்கு எதிரான பேரணி தொடர்பில் அதன் ஏற்பாட்டாளர்கள் இன்னும் பதில் சொல்லாதிருக்கிறார்கள் என இன்ஸ்பெக்டர்-ஜெனரல் அப் போலீஸ் காலிட் அபு பக்கார் கூறியுள்ளார்.
அப்பேரணியை கேஎல்சிசி-இல் தொடங்கி டாட்டாரான் மெர்டேகாவில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால், டாட்டாரான் மெர்டேகாவைப் பயன்படுத்த முடியாது. அது செப்பனிடப்படுவதாக ஏற்பாட்டாளர்களிடம் ஏப்ரல் 16-ஆம் தேதி நடந்த பேச்சுகளின்போது தெரிவிக்கப்பட்டதாக காலிட் கூறினார்.
“அவர்களின் பதிலுக்காகக் காத்திருக்கிறோம். அவர்களின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்”, என்று காலிட் இன்று புத்ரா ஜெயாவில் கூறினார்.
கவணம்,ஒரு நல்ல காரியம் செய்யுமுன்,1 கெட்ட காரியம் செய்வர்.யானை வரும் பின்,மணியோசை வரும் முன்,அச்சமூட்டி எச்சரிக்கை.இந்த காலகட்டத்தில் ஞாயம் வெல்லாது,அரசாங்கம்,அரண்மனையை எதிர்த்து இன வெறியர் ஆட்சி நடக்குது.நல்லகாரியத்தை தல்லிப்போடு.வாழ்க நாராயண நாமம்.
ஹிஷாமுடின் பதவி விளகியபின் தான் மாமூல் நிலைக்கு நாடு திரும் பும் அல்லது நஜிப்பை பதவி பரித்தபின் நிலமை சரி வரும்.பி.என்னில் பனிப்போர் நடக்கிரது.வாழ்க நாராயண நாமம்.
இது ஒரு சனியன் .gst