தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசுக்கு காலஅவகாசம் உள்ளது!- சம்பந்தன்

sambanthanதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காண அரசாங்கத்திற்கு மேலும் காலஅவகாசம் இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கியமான நாட்டிற்குள் பிரச்சினைக்கு தீர்வுகாண தாம் இணங்குவதாக கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

அரசாங்கத்திடம் அதற்கான விரிவான வேலைத்திட்டங்கள் இல்லாததன் காரணமாக பிரச்சினை சர்வதேசம் வரை சென்றுள்ளது எனவும் சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் தான் நாட்டுக்கு எதிரான கொள்கையின் அடிப்படையில் செயற்படுவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு அதனை தலைவரும் அமைச்சருமான நிமால் சிறிபால டி சில்வா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்பட எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் பேச்சுவார்த்தையின் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வை தேட அரசாங்கம் எதிர்ப்பார்த்துள்ளது எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: