எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு அவரது மலேசிய வருமையின்போது தம்மைச் சந்திக்க வேண்டாம் என்று நெருக்குதல் கொடுக்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறார்.
“அமெரிக்க அதிபர் அடுத்த வாரம் பசிபிக்-வட்டார பங்காளித்துவ ஒப்பந்தத்தில் (டிபிபிஏ) கையொப்பமிடுவதற்காக மலேசியா வரும்போது என்னைச் சந்திக்க வேண்டாமென்று பிரதமர் நஜிப் (அப்துல் ரசாக்) அவருக்கு நெருக்குதல் கொடுத்திருப்பார் என நினைக்கிறேன்..
“நஜிப் டிபிபிஏ–இல் கையெழுத்திட ஒப்புக்கொண்டிருக்கிறார்”, என்று அன்வார் கூறினார்.
மலேசிய- அமெரிக்க நல்லுறவை பக்காத்தான் ரக்யாட் என்றும் ஆதரிப்பதாக அன்வார் கூறினார்.
“இரு நாடுகளுக்குமிடையில் வர்த்தகத்தையும் முதலீடுகளையும் ஆதரிக்கிறோம். ஆனால், டிபிபிஏ-ஐ ஆதரிக்கவில்லை”.
அதில் உள்ள சில விதிகள் உள்ளூர் தொழில்களுக்குப் பாதகமானவை என்றாரவர்.
நானுந்தான் ஒபாமாவா சந்திக்க பெர்மிசென் கேட்டு கொடுக்கல. இதுக்கு போய் நொந்துக்கலாமா. ஒபாமா இல்லனா என்னா. நம்பளால ஒரு பின் லாடன கூடவா பார்க்க முடியாது. ஒபாமா நொந்துக்கிற மாதிரி.