அரசாங்கம் ஏழை-பணக்காரர் இடைவெளியைக் குறைக்க பண உதவி செய்வதை நிறுத்த வேண்டும் என மலேசிய பொருளாதார ஆய்வுக் கழகம்(எம்ஐஇஆர்) வலியுறுத்தியுள்ளது.
பந்துவான் ரக்யாட் 1மலேசியா (பிரிம்) பணவீக்கத்தைத்தான் உண்டாக்கும் என்கிறார் எம்ஐஇஆர் செயல்முறை இயக்குனர் சக்கரியா அப்துல் ரஷிட்.
“நம் உற்பத்தித்திறன் கூடுகிறது…….வருமானம் கூடுவதில்லை….என்பதே ஒரு பொருத்தமற்ற நிலையாகும்”, என்று அந்த எம்ஐஇஆரின் பொருளாதார நிபுணர் அக்கழகத்தின் காலாண்டு விளக்கக்கூட்டத்தில் கூறினார்.
“பிரிம் ஒரு தற்காலிக உதவியாக இருக்குமே தவிர நிரந்தர தீர்வல்ல”.
மலேசியப் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதுபோல் தெரியலாம். ஆனால், உள்ளுக்குள் நுணுகி ஆராய்ந்தால்தான் பிரச்னைகள் புலப்படும் என்றாரவர்.
நாட்டின் தொழிலாளார்பலத்தில் மூன்றில் ஒரு பகுதியினர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். உற்பத்தித்திறன் பெருக்கத்துக்கு இவர்களே பெரும்பகுதி காரணமாவர். அதேபோல், சம்பளம் குறைவாக இருப்பதற்கும் இவர்களே காரணமாக இருக்கிறார்கள் என்றாரவர்.
இப்ப இத எப்படி என்ன ஆதாரத்தைக் கொண்டு நிப்பாட்டரதுன்னு யோசிச்சு ஆளாளுக்கு அறிக்கை விட்டு இத அழிக்கப் பாக்காதிங்க. அப்புறும் ஓட்டுப் போட்டவங்க எல்லாம் எகிறி கொதிக்க ஆரம்பிச்சிடுவாக யோவ்.
முதல்ல பிறிம் வாங்கியவர்களுக்கு எல்லாம் இப்போது இல்லை
என்று பதில் வருகிறது. கஜான காலி போல் இருக்கிறது
லஞ்சத்தில் வாழ்ந்துவந்த அம்நோகாரர்கள்,பொது மக்களுக்கும் லஞ்சம் பெற்றுக்கொண்டு வாக்களிக்க கற்றுக்கொடுத்துவிட்டனர், இனி பிரிம் இல்லாமல் BNநிற்கு வாக்களிக்க பிரியபடமாட்டார்கள், பங்களா காரன் கூட; டுயிட் தரா சாயா தாமாவு உண்டி;என்பான்,வெளி நாட்டு தொழிலாளர்களுக்கு வருமான வரி விதிக்கப்படாததால் , work permit மூலியமாக RM 1500 லிருந்து மூன்றாயிரம் நான்காயிரம் என்று வசூலித்து வந்தனர்,பிறகு பொது தேர்தலில் BNனுக்கு வாக்களிபதற்காக,வந்தவர்களில் பலருக்கு I/C வழங்கி விட்டனர்,சம்பாதிக்க வந்தவர்கள் அனைவரும், தான் தன் நாட்டிற்கு பணத்தை தொடர்ந்து அனுப்பிக்கொண்டுதான் இருக்கின்றனர்,இவர்களுக்கு tax free ,permit free ,rumah free ,letrik free ,air free , bujang dan anak darapun free .இவர்களை தவிர்த்து கள்ளக்குடியேறிகள்,அகதிகள் (unhcr ) அனைத்து செலவுகளை ஈடுகட்டவும் அம்நோ காரர்கள் கொள்ளையடித்து தின்னவும்,பொதுமக்களாகிய நாம் தான் பலியாகிறோம், bn, GST ……. bn gila sudah teruk !