இலங்கையில் இறுதிப் போரின் போது தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தீவிரமான அவதானத்தை செலுத்தி வருகிறது.
இந்த விடயத்தில் இலங்கை தமது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை எதிர்ப்பார்ப்பதாக போரின் போது பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதி பங்குரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்ற போது இன்னர் சிட்டி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பங்குரா இந்த கருத்தை வெளியிட்டார்.
இலங்கைப் போரின் போது தமிழ் பெண்கள் இலக்கு வைத்து பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டமை கொடுமையான செயல்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹனவிடம் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக பங்குரா குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறலை இதன்போது வலியுறுத்தியுள்ளதாக பங்குரா தெரிவித்தார்.
இந்தநிலையில் இறுதிப்போர் தொடர்பாக சட்டத்தரணி யஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அவரை நியூயோர்க்குக்கு அழைத்து விபரங்களை அறியவுள்ளதாகவும் பங்குரா குறிப்பிட்டார்.
சூக்காவின் அறிக்கையில் போரின் போது தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்பட்டமை குறித்து விரிவான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
போரின் போது பாலியல் வன்முறைகள்: ஐநாவின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்றில் இலங்கை உட்பட்ட 21 நாடுகள், நடப்பு மற்றும் அண்மைய போரின் போது பாலியல் வன்முறைகள் இடம்பெற்ற நாடுகள் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இந்த அறிக்கையை நேற்று நியூயோர்க்கில் வெளியிட்டார்.
இந்தப்பட்டியலில் இலங்கை, மியன்மார், ஆப்கானிஸ்தான், சிரியா உட்பட்ட நாடுகள் உள்ளடங்குவதாக போரின் போது பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதி ஸைனாப் ஹாவா பங்குரா தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பான் கீ மூன் எல்லாம் ஒரு மனுஷன்? போரில் பல்லாயிர அப்பாவிகள் ஈழ மக்கள் கொல்லப்படும்போது.புத்தரை வணங்கிக்கொண்டு இருந்தார் போல .துரோகி.