புலிகள் மீண்டெழ முயன்றதற்கு ராஜபக்ச அரசே பொறுப்பு – சரத் பொன்சேகா குற்றச்சாட்டு

sarath_fonseka-300x171விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளுக்கு முறைப்படி புனர்வாழ்வு வழங்கப்படவில்லை என்று சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா குற்றம்சாட்டியுள்ளார்.  “இதன் விளைவாகத் தான், அவர்களில் சிலர் ஈழப் போராட்டத்தில் மீண்டும் இறங்கினர்.  புனர்வாழ்வுத் திட்டங்களுக்காக  பெறப்பட்ட வெளிநாட்டு நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ராஜபக்ச அரசாங்கத்தின் உயர்மட்டத்தினர் அதனை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளனர்.

போர் முடிவுக்கு வந்த பின்னர், நலன்புரி நிலையங்களில் 280,000 மக்கள் தங்கியிருந்தனர்.

அவர்களில் 11 விடுதலைப் புலிகள் அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு எல்லா அடிப்படைவசதிகளும், முழுமையான தொழிற்பயிற்சி, உடற்பயிற்சி, மற்றும் உளவளப் பயிற்சி என்பன வழங்கப்படுவதாக அரசாங்கம் கூறியது.

ஆனாலும் அரசாங்கத்தினால் புனர்வாழ்வு அளிக்கப்பட்ட சில போராளிகள், புலிகள் இயக்கத்தக்கு மீள உயிர்கொடுக்க முயன்றதாக கேள்விப்படுகிறோம்.

இதற்கு புனர்வாழ்வுத் திட்டத்தின் குறைபாடே காரணம்.

முன்னாள் விடுதலைப் புலிகள் மீண்டெழ முயன்றதற்கு அரசாங்கமும் பொறுப்பாகும்.

TAGS: