காலிட்: நீர்ப் பங்கீடு அடுத்த வாரம் முடிவுறலாம்

water1ஈயக்குட்டைகளில்  நிரம்பியுள்ள  நீரை, அணைக்கட்டுகளுக்குக்  கொண்டுவரும்  முயற்சி  வெற்றிகரமாக  நடந்தால்  சிலாங்கூரிலும்  கோலாலும்பூரிலும்  அமலில்  உள்ள  நீர்ப்  பங்கீடு  அடுத்த  வாரம்  முடிவுக்கு  வரலாம்.

“அது  நடந்தால்  நீர்ப்  பங்கீடு  நிறுத்தப்படுவதாக  அடுத்த  வாரம்  அறிவிக்க  முடியும்”,  என  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிம்  இன்று  கிள்ளானில்  தெரிவித்தார்.

8 பம்புகள்  நாளொன்றுக்கு  400 மில்லியன்  லிட்டர்  நீரைப்  பல  இடங்களிலிருந்து,   சுங்கை  சிலாங்கூர்  அணைக்கட்டுக்குப்  பாய்ச்சி  வருவதாக அவர்  சொன்னார். இந்த  சுங்கை  சிலாங்கூர்  அணைக்கட்டிலிருந்துதான்  கிள்ளான்  பள்ளத்தாக்குக்குத்  தேவைப்படும்  60  விழுக்காட்டு  நீர்  விநியோகம்  செய்யப்படுகிறது.