மே 1 பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)- எதிர்ப்புப் பேரணியை டாட்டாரான் மெர்டேகாவில் நடத்த அனுமதிப்பதில்லை என்ற முடிவுடன் இருக்கிறார்கள் போலீசார். ஆனால், பேரணி ஏற்பாட்டாளர்களோ அங்குதான் அதை நடத்துவது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
கூட்டரசு அரசமைப்பின் பகுதி 10, அமைதியாக பேரணி நடத்த அனுமதிப்பதாக பேரணி பேச்சாளரும் பிஎஸ்எம் தலைமைச் செயலாளருமான எஸ்.அருட்செல்வன் கூறினார்..
மேலும், இதற்குமுன் தொழிலாளர் தினப் பேரணிகளுக்கும் மற்ற நிகழ்வுகளுக்கும் போலீசார் கேட்காமலேயே அனுமதி அளித்திருப்பதாக அவர் கூறினார்.
“இதற்குமுன் கேஎல்சிசி முன் கூடி இருக்கிறோம். முன்னாள் (அமெரிக்க) வெளியுறவு அமைச்சர் கொண்டலீஸா ரைஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தபோதுகூட நாங்கள் அனுமதி பெறவில்லை. போலீசார் எங்களை போலீஸ் நிலையத்துக்கு வரச் சொன்னார்கள். ஆனால், அனுமதி எடுக்குமாறு சொல்லவில்லை.
“எனவே, அதிகாரிகளிடம் அனுமதி கோருவது தேவையற்றது”, என்றாரவர்
பிடிவாதமாக இருந்தால்தானே எதிர் கட்சிக்கு அழகு ! ஆமாம் சாமி போட நினைத்தால் bn னில் சேர்ந்துவிடலாம் !
ஏனையா, அருட்செல்வரே! மற்ற எதிர்கட்சிக்காரனெல்லாம் ஒரு நாலு பேரை கூட்டிக்கிட்டு வெளிநாடு போறான். தொண்டை வரைக்கும் “போட்டுக்கறான்’. இங்கே வந்ததும் பத்த்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்து அரசியல் நடத்தி பிழைப்பு நடத்துறான். நீங்களும் உங்கள் கட்சியான PSM மும் மக்கள் மக்கள் என அலைகிறீர்களே, பாவம் பிழைக்க தெரியா சோணகிரிகள்.
ஏனையா, அருட்செல்வரே! அருமையான …………. நீங்கள்
மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று போராடும் வீரனை வாழ்த்துங்கள் ..