இலங்கைக்கு எதிராக பொருளாதார தடையை விதிப்பது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று பிரித்தானியாவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஜோன் ரன்கின் தெரிவித்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்க பிரித்தானியா பூரண ஆதரவை வழங்கி இருந்தது.
பொருளாதார தடை விதிப்பது ஒரு முக்கியமான விடயமல்ல . ஆனால் பொருளாதார தடையை விதிப்பது குறித்து பிரித்தானியா ஆலோசனை நடத்தவில்லை.
அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு இதற்கான அதிகாரமும் இல்லை.
அதேவேளை எந்தவொரு நாடும் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்குமாறு கோரவில்லை.
இலங்கையில் மறுசீரமைப்பு மற்றும் சமூக சமநிலைகளை ஏற்படுத்துவதே பிரித்தானியாவின் நோக்கமே தவிர, பொருளாதார தடையை ஏற்படுத்துவது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.