தென் கொரிய பிரதமர் சுங் ஹாங்காங் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி தென்கொரிய கடற்பரப்பில் 476 பயணிகளை ஏற்றி சென்ற கப்பல் கவிழ்ந்ததை அடுத்து அந்நாட்டில் அரசுக்கு எதிரான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து அந்நாட்டு பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
முன்னரே தாம் பதவி விலக எண்ணிய போதிலும் இந்த சம்பவத்தை கையாள வேண்டிய பொறுப்பு காணப்பட்டதனால் தாம் அப்போது பதவி விலகவில்லை. எனினும் அதற்கான காலம் வந்துள்ளதாக பிரதமர் சுங் ஹாங்காங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த கப்பலின் அறை ஒன்றிலிருந்து 48 மாணவிகளின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டதுடன், இதுவரை மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 115 பேரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
காணாமல் போன 115 பேர்களும் உயிருடன் இருக்க வாய்ப்பு குறைவு என மீட்புப்படையினர் கருதுவதால் உயிரிழந்தவரக்ளின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
இவன் சோற்றில் ஒப்பு போட்டு சாப்பிடுறான்.
நமது BN அரசாங்கத்தின் அமைச்சர்கள் எரு…. மா….ளுக்கு சமம்,
எருமை மாடுகளை அவமதிக்காதீர்கள்–தயவு செய்து. அவை நல்ல பால் கொடுக்கும் நன்றாக உழைக்கும்–