பிரபாகரனின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்த புலனாய்வு உத்தியோகத்தர்?: ஒரு லட்சம் ரூபாய் சன்மானம்

prabhakaran01தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கைவிரல் அடையாளங்களை பதிவு செய்த புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் நிலாப்டீனுக்கு ஒரு லட்சம் ரூபாவே வழங்கப்பட்டுள்ளது என சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பிரபாகரனின் கைவிரல் அடையாளத்தை பதிவு செய்தல் மற்றும் ஆயிரம் புலி உறுப்பினர்களை கைது செய்த நிலாப்டீனுக்கு ஒரு லட்சம் ரூபாவே (RM 2500) சனமானமாக வழங்கப்பட்டுள்ளது.

நிலாப்டீனுக்கு இரண்டு லட்சம் ரூபா (RM 5000) சன்மானம் வழங்க தீர்மானிக்கப்பட்ட போதிலும், மத்திய வங்கி குண்டுத் தாக்குதல் தொடர்பில் பிரபாகரனுக்கு எதிரான வழக்கிற்கு மேன்முறையீடு செய்யப்பட்ட காரணத்தினால் ஒரு லட்ச ரூபா வழங்கப்படவில்லை.

பொலிஸ் தலைமையகத்திற்கு சென்று சன்மானம் குறித்து கேள்வி எழுப்பியதனைத் தொடர்ந்தே ஒரு லட்சம் ரூபா பணமும் நிலாப்டீனின் மனைவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத் தாக்குதல், தலாத மாளிகை மீதான தாக்குதல், ரத்மலானை விமான நிலையம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல முக்கிய தாக்குதல்களுடன் தொடர்புடைய புலி உறுப்பினர்களை கண்டு பிடித்த நிலாப்டீனுக்கு பதவி உயர் வழங்காமலேயே ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

மரண அச்சுறுத்தல் காரணமாக நிலாப்டீன் 2005ம் ஆண்டில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அப்பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்படுகிறது.

TAGS: