வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் அடிப்படையில் சிகப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை, இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ள குறித்த நாடுகளிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய புலி உறுப்பினர்கள் மறைந்திருக்கும் பதினெட்டு நாடுகளுக்கு ஏற்கனவே புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புலி உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கைது செய்யப்படும் புலி உறுப்பினர்களை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட உள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான புலி உறுப்பினர்கள் கனடாவில் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளனர் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
யாண்ட உலக நாடுகள் என்ன மரமண்டைகள