ஜிஎஸ்டியில் கலந்துகொண்ட ‘துரோகிகள்’மீது நடவடிக்கை: கியுபெக்ஸ் எச்சரிக்கை

asihபொருள், சேவை  வரி-எதிர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில்  கலந்துகொண்ட அரசுப்  பணியாளர்கள்,  அரசாங்கத்தில்  வேலை  செய்ய  அருகதையற்ற  துரோகிகளாகக்  கருதப்படுவர்.

அவர்கள்மீது  நடவடிக்கை  எடுக்கப்படும்  என்று  அரசுப்  பணியாளர்  சங்கங்களின்  கூட்டமைப்பான  கியுபெக்ஸின்  தலைவர்  அஸே  மூடா  எச்சரித்துள்ளார்.

பேரணியில் கலந்துகொண்ட  அரசுப்  பணியாளர்கள், Akujanji(விசுவாசப்  பிரமாணம்) மற்றும்  Ikrar Perkhidmatan(நன்னடத்தை  உறுதிமொழி) -ஐ  மீறியவர்களாவர்.

“இதற்குமுன்பே  குறிப்பிட்டிருக்கிறேன், Akujanji மற்றும்  Ikrar Perkhidmatan காரணமாக  அரசுப்  பணியாளர்கள்  அரசாங்கத்துக்கு  எதிரான  பேரணிகளில்  கலந்துகொள்ள  முடியாது  என்று……விருப்பமோ  இல்லையோ  அவர்கள்  அதற்குக்  கட்டுப்பட்டுத்தான்  ஆக  வேண்டும்.

“விருப்பமில்லை,  பேரணியில்  கலந்துகொள்ளத்தான்  விருப்பம்  என்றால்  அவர்கள்  அரசுப் பணியைத்  துறக்கலாம்”, என்றவர்  சொன்னதாக  பெர்னாமா  கூறியது.