சர்வதேசத்தின் மத்தியில் இருக்கிறோம் என்பதை இலங்கை புரிந்து கொள்ள வேண்டும்!

Worldmapஇலங்கை சர்வதேச நாடுகளின் மத்தியிலேயே இருக்கிறது என்பதை இலங்கை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இலங்கை அரசாங்கம் செய்யத் தவறிய விடயங்களை சுட்டிக்காட்டியே சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்திருக்கின்றன.

இந்த அழுத்தங்களை சர்வதேச நாடுகளுடன் ஒத்துழைத்து செயற்படுவதன் ஊடாக தவிர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தை எதிரிகளாக பார்க்கிறது.

தாம் சர்வதேசத்தின் ஒத்துழைப்பு இன்றி தனித்து செயற்பட முடியாது என்பதை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்து வருகிறது.

இது நாட்டுக்கு மிகப்பெரிய பிரச்சினையை தோற்றுவிக்கும் என்று அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.

TAGS: