இலங்கையில் புத்தரை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கை தவ்ஹித் ஜமாத் அமைப்பின் செயலர் அப்துல் ரபிக்டீன் என்பவரை, கடும் நிபந்தனைகள் கொண்ட பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஆறாம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்ட இவர், புத்தரை நிந்திக்கக்கூடிய சில கருத்துகளைத் தெரிவித்தார் என்று இலங்கையின் பிரதி போலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக தெரிவித்தார்.
எதிர் தரப்பு சார்பில் ஆஜரான சட்டவாதி கருத்துகளை தெரிவித்த பொது சந்தேக நபரினால் வெளியிடப்பட்ட கருத்துகள் சம்பந்தமாக அவர் பல திருத்தங்களை ஊடகங்கள் முலம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
எதிர் காலத்தில் இவ்வாறான கருத்துகளை வெளியிடுவதை இவர் தவிர்த்துக் கொள்வதாகவும் சட்டவாதி நீதிமன்றத்துக்கு வாக்களித்தார்.
புத்த பகவானை அவமதிக்கும் நோக்கம் சந்தேகநபருக்குள் இல்லை என்று தெரிவித்த சட்டவாதி அவரை பிணையில் விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார்.
ஆயினும் இந்த வழக்கைத் தொடுத்த ஜாதிக ஹெல உறுமய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரதன தேரர் மற்று போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆயினும் சந்தேகநபரை பிணையின் கீழ் விடுதலை செய்த நீதிபதி மதங்களுக்கிடையே மோதல்கள் ஏற்படக்கூடிய கருத்துகளை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டார்.
இவாறான கருத்துகளை வெளியிட்டால் பிணை ரத்துச் செய்யப்பட்டு அவர் விளக்க மறியலில் வைக்கப்படுவார் என்றும் எச்சரித்தார் நீதிபதி.
இந்த திறப்பு வழங்கப்பட்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய, அதுரலியே ரதன தேரர், “நீதிமன்ற திறப்பு சம்பந்தமாக எமக்கு எதுவும் கூற முடியாது. ஆயினும் சந்தேகநபர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும். மகா நாயக்க தேரர்கள் முன்பு அவர் பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்” என்றார் .
பிணை வழங்கப்பட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தவுஹித் ஜமாத் அமைப்பின் செயலாளர் அப்துல் ரபிக்டின் புத்த பகவானுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் நோக்கம் தனக்கு இல்லை என்று கூறினார். -BBC
புத்தம் சரணம் கச்சாமீ இலங்கையில் ரத்தம் சரணம் கச்சாமீ!!!!!!!!!!