அமெரிக்காவில் உள்ள ஐக்கிய நாடுகளுக்கான கனேடிய தூதரகத்தில் இலங்கையில் இறுதி யுத்தத்தின் போது நடைபெற்ற பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் தொடர்பான அமர்வு ஒன்று இன்று இரவு நடைபெறுகிறது.
இன்னர் சிட்டி பிரஸ் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இதன் போது இலங்கை இராணுவத்தினர் இறுதியுத்தத்தில் மேற்கொண்ட தமிழ் பெண்களுக்கு எதிரான பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் யுத்த காலங்களில் பாலியல் கொடுமைகள் குறித்த ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி சைனாப் பங்குரா அண்மையில் முன்வைத்த அறிக்கை விவாதத்துக்கு உட்படுத்தப்படவுள்ளது.
இதில் இலங்கை சார்பாக ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதி நிரந்தர பிரதி சவேந்திரசில்வா கலந்துக் கொள்கிறார்.
மேலும் நியுசிலாந்து கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கலந்துக் கொள்ளவுள்ளனர்.