வாயை மூடும்: வேள்பாரிக்கு இஸ்மா எச்சரிக்கை

ismaமஇகா  வியூக  இயக்குனர்  எஸ்.வேள்பாரி  வாய்க்கு  வந்தபடி  பேசக்கூடாது  என  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா) எச்சரித்துள்ளது.

இஸ்மா   என்ற  சொல்லைக்  கேட்டதும்  அதை ஒரு பாலியல் நோய்  என்று  நினைத்ததாகக்  கூறிய  எஸ். வேள்பாரிமீது  கடும்  கோபம்  கொண்டிருக்கிறார்  இஸ்மா உதவித்  தலைவர்  அப்துல்  ரஹ்மான்  மாட்  டாலி.

“இகழ்ச்சியாக  பேசுவதை  நிறுத்திக்கொள்வது  அவருக்கு  நல்லது.

“அவர்  சம்பந்தமில்லாத  விவகாரங்களில்  குறுக்கிடவும்  கூடாது”,என  ரஹ்மான்  கூறியதாக  இஸ்மாவெப்  இணையத் தளம்  கூறியது.

சீனர்களை “ஊடுருவல்காரர்கள்”  என்று  வருணித்த  இஸ்மா  தலைவர்  அப்துல்லா  ஷேக்  அப்துல்லா  ரஹ்மானை  வேள்பாரி  நேற்று  சாடி  இருந்தார்.