துக்க தினமான மே 18 அன்று வீடுகளில் தீபமேற்றி அஞ்சலி செலுத்துங்கள்: அமைச்சர் டெனீஸ்வரன் வேண்டுகோள்

deepamமுல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு தமிழ் மக்களிடம் வடமாகாண போக்குவரத்து, வாணிப மற்றும் மீன்பிடி அமைச்சர் பா.டெனீஸ்வரன்; இன்று  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை தினம் அனுஷ;டிப்பது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் மேலும் தெரிவிக்கையில்,

முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது போராளிகள் மட்டுமல்ல பொதுமக்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள். அந்தவகையில், அனைவருக்காகவும் பொதுமக்கள் தமது வீடுகளில் தீபமேற்றி அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

முள்ளிவாய்க்கால் படுகொலை தினத்தினை பொது இடத்தில் நினைவு கூர்ந்தால், அதனை இராணுவ புலனாய்வாளர்கள் தடுத்து நிறுத்துவார்கள். ஆனால், வீடுகளில் தீபமேற்றினால் அவற்றினை இராணுவ புலனாய்வாளர்களினால் தடுக்க முடியாது.

ஆகவே, மே 18 அன்று தமிழ்மக்கள் அனைவரையும் தமது வீடுகளில் தீபமேற்றி அஞ்சலி செலுத்துங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

TAGS: