அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, மலாயாப் பல்கலைக்கழகத்துக்கு வருகை மேற்கொண்டபோது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு விளக்கம்கேட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
மலாயாப் பல்கலைக்கழக மாணவர் விவகாரத்துறை கடிதங்களை அனுப்பி வைத்துள்ளது.
ஒபாமா தென்கிழக்காசிய இளம்தலைவர்களைச் சந்திக்க அப்பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது அம்மாணவர்கள் பசிபிக்-வட்டார பங்காளித்துவ ஒப்பந்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து சின்ன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நீங்கள் எல்லாம் மாணவர்கள். வயசுக்கு வராதப் பசங்க. வெளிய வந்த பிறகு ஆர்ப்பாட்டம் செய்யுங்கள். ஏதோ இஸ்லாம் என்று சொல்லி ஆர்ப்பாட்டம் செய்தால் தாங்கிக்கொள்ளலாம்! இதனையெல்லாம் இந்த நாடு தாங்காதப்பா!