கொக்குத்தொடுவாயில் தமிழ் மக்களின் காணிகள் சிங்களவர்களுக்கு பகிர்ந்தளிப்பு

karunaddukerniமுல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள தமிழ் மக்களுக்கு சொந்தமான விவசாய காணிகள் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. ஆங்கில ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இந்த பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து நூற்றுக்கணக்கான குடும்பங்களில், சில குடும்பங்கள் மாத்திரம் கடந்த 2011ம் ஆண்டளவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டனர்.

எனினும் அவர்கள் இன்னமும் தற்காலிக கூடாரங்களை அமைத்தே வாழ்ந்து வருகின்றனர்.

அத்துடன் அவர்கள் கொக்குத்தொடுவாயில் மூன்று கிராம சேவகர் பிரிவில் மாத்திரமே குடியேற்றப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய காணிப் பகுதிகள் அனைத்தும் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: