இந்தப் படத்தை பார்த்த உடனே உங்களுக்கு தெரியும். ஏதோ ஒரு செய்தியில் இவர்கள் தொடர்பாக படித்திருப்பீர்கள் என்று. ஆம் இவர்கள் தான் இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுக்கு வேலைசெய்த மானம் கெட்ட தமிழர்கள் ! தற்போது இவர்கள் இந்தியா சென்றுள்ளார்கள் ! அங்கே பல பேட்டிகளை கொடுத்து ஏதோ இலங்கை இராணுவத்தின எதிரிகள் போல தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
சிறிலங்காவிலிருந்து அண்மையில் தமிழகத்திற்குச் சென்றவர்களில் தயாபரராஜா மற்றும் அவரது மனைவி உதயகலா ஆகியோர் வன்னியில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வாட்டி வதைத்து ஏறக்குறைய ஐந்து கோடி ரூபா நிதி மோசடி செய்துகொண்டு அகதி என்ற பெயரில் இந்தியாவுக்கு தப்பிச் சென்ற விடயம் தற்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. (அதிர்வு இணையத்தின் பிரத்தியேக செய்தி இது)
சிறிலங்கா படைப் புலனாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்த இவர்கள் இருவரும், தமிழ் மக்களை அச்சுறுத்தினர். சிறிலங்கா படையினர் இறுதி யுத்தத்தின்போது கைது செய்து சிறைகளில் தடுத்து வைத்திருக்கின்ற முன்னாள் போராளிகள், மற்றும் சாதாரண பொதுமக்களை விடுவிக்க முடியும் என்று, உறவுகளுக்கு ஆசை வார்த்தை கூறிய இவர்கள் அதற்காக அந்த உறவுகளிடம் இருந்து பல இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றிருக்கின்றனர். இவ்வாறு ஒரு குடும்பத்திடம் இருந்து இவர்கள் அதியுச்ச பட்சத் தொகையாக 37 லட்சம் ரூபாவைப் பெற்றது தெரியவந்துள்ளது. ஏனைய குடும்பங்களிடமிருந்து 30 இலட்சம், 15 இலட்சம், 13 இலட்சம், 7 இலட்சம், 6 இலட்சம் மற்றும் அதற்கு கீழான தொகைகளையும் பெற்றிருக்கின்றனர். முழுவதுமாக ஐந்து கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை இவர்கள் மோசடி செய்திருக்கின்றனர்.
இவர்களுக்கு எதிராக கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி மற்றும் வவுனியா ஆகிய நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவருகின்றது. பல பெண்களை படையினருக்கும் படைப் புலனாய்வாளர்களுக்கும் இவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்த விடயங்களும் கண்ணீர் கதைகளாக அம்பலமாகியிருக்கின்றன. எனவே, இவர்களுக்காக தமிழ்நாட்டிலுள்ள எந்தவொரு அமைப்போ அரசியல்வாதிகளோ குரல்கொடுக்க வேண்டாமென்றும், இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒத்துழைக்குமாறும் தாயகத்திலுள்ள உறவுகள் தமிழக உறவுகளிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
இவர்களால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இவர்கள் தொடர்பான சகல விடயங்களையும், தயாபரராஜா (தேசிய அடையாள அட்டை இலக்கம் (810020431V) யாழ்ப்பாணம் காரைநகர் வாரிவளவைச் சேர்ந்தவர். இவருடைய தகப்பனின் பெயர் செல்லத்துரை கதிரவேலு. இவர் பெரதெனியா பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொண்டு 2005 ஆம் ஆண்டு வெளியேறியவர். இதன் பின்னர் வன்னி நெற் என்ற பெயரில் முல்லைத்தீவில் தகவல் தொழில்நுட்ப நிலையம் ஒன்றை நடத்தியவர். தமிழீழ விடுதலைப் புலிகளிடம் மாதாந்தம் ஏறக்குறை ஐம்பதினாயிரம் ரூபா பணம் பெற்றுக்கொண்டு அவர்களுக்காக தகவல் தொழில்நுட்ப பணியாற்றியவர்.
தயாபரராஜாவின் மனைவி பெயர் உதயகலா. (தேசிய அடையாள அட்டை இலக்கம் (825884726V) இவர் சாவகச்சேரி நுணாவிலைச் சேர்ந்தவர். இவர்கள் திருமணம் செய்து மூன்று பிள்ளைகள் உண்டு. மூத்த மகன் டியோரன் (9வயது), மகள்கள் டிலினி (6 வயது), டில்கியா (2வயது). இவர்கள் ஆரம்பத்தில் முல்லைத்தீவில் வசித்த போதிலும் தற்போது இலக்கம் 60, ஆரம்பப் பாடசாலை வீதி, வவுனியாவில் வசித்து வந்த நிலையிலேயே இந்தியாவுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் இலங்கை புலனாய்வுத்துறையால் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். எனவே அனைவரும் நிதானமாக இருத்தல் நல்லது !