பாஸ் ஹுடுட் சட்டமுன்வரைவைத் தாக்கல் செய்யாது

sabuபாஸ்,  கிளந்தானில்  ஹுடுட்  சட்டத்தை  அமல்படுத்த  வகைசெய்யும்  சட்ட  முன்வரைவை  ஜூன்  மாத  நாடாளுமன்றக்  கூட்டத்தில் தாக்கல்  செய்யப்போவதில்லை. ஹுடுட்  பற்றி  ஆராய  புதிதாக  கூட்டுத்  தொழில்நுட்பக்  குழு  அமைக்கப்படவிருப்பதை  அடுத்து  இம்முடிவு  செய்யப்பட்டுள்ளது.

“தொழில்நுட்பக்  குழு  பரிந்துரைகள்  செய்யவும்  மேல்நடவடிக்கை  எடுக்கவும்  இடமளிக்க  அவ்வாறு  முடிவு செய்யப்பட்டது”, என பாஸ்  துணைத்  தலைவர்  முகம்மட்  சாபு  கூறினார். அவர்,  செய்தியாளர்  கூட்டமொன்றில்  கட்சித்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்  விடுத்துள்ள  அறிக்கையை  வாசித்தார்.

கிளந்தான்  அரசும் கூட்டரசு  அரசாங்கமும்  அந்தத்  தொழில்நுட்பக்  குழுவை  அமைக்கலாம்  என்ற  துணைப்  பிரதமர்  முகைதின்  யாசினின்  பரிந்துரையை  பாஸ்  ஏற்றுக்கொண்டிருப்பதாக  முகம்மட்  சாபு   கூறினார்.