போரில் இறந்த உறவுகளுக்காக தனிப்பட்டவர்களின் சமய நிகழ்வுகளுக்கு அனுமதி!- இராணுவம்

theepamவிடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையிலான போரின் போது உயிரிழந்தவர்களுக்காக சமய நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்கப்படும்.  எனினும் பொது நிகழ்வுகளுக்கே அனுமதி வழங்கப்படமாட்டாது என்று இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

இராணுவ பேச்சாளர் நுவன் வணிகசூரிய இதனை இலங்கையின் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

போரில் உயிரிழந்தவர்களுக்காக தனிப்பட்டவர்கள் சமய நிகழ்வுகளை நடத்த அனுமதியுண்டு எனினும் பொதுநிகழ்வுகளை நடத்தமுடியாது என்று வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகளின் கொடிகளை தாங்கியிருப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதேவேளை 2009ம் ஆண்டு போர் வெற்றியை இந்த தடவை எதிர்வரும் 18 ம் திகதி மாத்தறையில் கொண்டாட இலங்கை அரசாங்கம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.

TAGS: