வட மாகாண ஆளுநராக படை அதிகாரிகள் வேண்டாம்: எம்.ஏ. சுமந்திரன்

SumanthiranTNAவடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு படை அதிகாரிகளை நியமிப்பதை தமிழ்த் தேசியக் கூட்மைப்பு எதிர்க்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மாகாண ஆளுநரின் பதவிக்காலம் அடுத்த ஜூன் மாதம் முடிவடைகிறது. அந்த பதவிக்கு மீண்டும் படை அதிகாரிகளை நியமிப்பதை கூட்டமைப்பு எதிர்க்கின்றது.

ஆளுநர் பதவி என்பது சிவில் அதிகாரிக்கு உரியதாக இருக்க வேண்டும் என்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடு. இது தொடர்பில் வடக்கு மாகாண சபை யோசனை ஒன்றையும் நிறைவேற்றியுள்ளது.

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க நியமிக்கப்பட்டாலோ, மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆளுநராக இருப்பதோ எமக்கு பிரச்சினையில்லை.

அரச சேவையின் நிர்வாகத்துறையின் அதிகாரி ஒருவரே ஆளுநராக நியமிக்கப்பட வேண்டும். இதன் காரணமாகவே கொள்கையளவில் படை அதிகாரிகளை ஆளுநராக நியமிப்பதை நாங்கள் எதிர்த்து வருகின்றோம்.

தற்போதைய ஆளுநரின் பதவிக்காலம் முடிந்த பின்னர் என்ன நடக்க போகிறது என்பதை கூட்டமைப்பு அவதானித்து வருகின்றது எனவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

TAGS: