புக்கிட் குளுகோர் “நான் பாஸ் உறுப்பினர்தான். நான் அரசியலில் ஈடுபட்ட காலம் தொட்டே கட்சியின் உயர்த் தலைவர்கள் பலருக்கும் என்னைத் தெரியும்”. புக்கிட் குளுகோர் நாடாளூமன்ற இடைத் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடும் முகம்மட் நபி பக்ஸ் முகம்மட் நபி அப்துல் சத்தார் இவ்வாறு கூறினார்.
பாஸ் தலைவர்கள் அவரை அம்னோ ஆள் என்கிறார்கள். அதை மறுக்கும் முகம்மட் நபி,63, பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு 2000ஆம் ஆண்டில் கோம்பாக் கம்போங் பஞ்சாரில் உள்ள தம் வீட்டில் ஒரு ‘செராமா’வில் கலந்துகொண்டார் என்கிறார்.
பாஸ் உறுப்பினர் என்பதை நிரூபிக்க கட்சி உறுப்பினர் அட்டையையும் அவர் காண்பித்தார்.
அரை வேக்காடு அரசியல் வாதிகள் இவர்கள் .
தவறாக சொல்லுகிறிர்கள் முழு வேக்காடு அரசியல் நடிகர்கள் இவர்களை நம்பி மக்கள் ஒரு ஓட்டு கூடம் இவர்களுக்கு போட கூடாது.மாற்றம் தேவை ஜி எஸ் தி ஒழிக்க வேண்டும்.