புக்கிட் பீசி பிரதிநிதி ரோஸ்லி டாவுட், அம்னோவிலிருந்து விலகிய மூன்றாவது மாநில சட்டமன்ற உறுப்பினராவார். அவரது விலகலைத் தொடர்ந்து திரெங்கானு மாநிலச் சட்டமன்றத்தில் பிஎன் சிறுபான்மை அரசாகியுள்ளது.
முன்னாள் திரெங்கானு மந்திரி புசார் அஹ்மட் சைட்டும் அஜில் சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான கசாலி தயிப்பும் அம்னோவிலிருந்து விலகி சுயேச்சைகளான சில மணி நேரத்தில் ரோஸ்லியும் விலகினார்.
இதனால் இப்போது மாநிலச் சட்டமன்றத்தில் பிஎன் சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 14ஆகக் குறைந்துள்ளது. பக்காத்தான் ரக்யாட் 15 இடங்களை வைத்துள்ளது. மூவர் சுயேச்சைகள்.
மேலும் இருவர் அம்னோவிலிருந்து விலகலாம் என்ற செய்தியும் அடிபடுகிறது.
பேராக்கில் கொல்லைவழி ஆட்சி கொல்லைகொள்ளப்பட்டது….ஆனால் திரெங்கானுவிலோ சட்டத்தின் முறைப்படி ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது….தாவும் அரசியல் தவளைகளை கீழ்த்தனமான முறையில் எதிர்க்கட்சி வாங்கவில்லை!!!!!!
ஓராண்டு தானே ஆகிறது !!
இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளதே!!!
நாடாளுமன்றத்திலும் இது பிரதிபலித்தால்…
ஒரு மாற்றத்தை பார்க்கலாமே !!!
யாரால் எப்போது தான் அது நடக்கும் ???
அதை கேட்க காண ஆவலாய் உள்ளதே….