கிட் சியாங்கின் அரசியல் செயலாளர் தெலோக் இந்தான் வேட்பாளர்?

dynaதெலோக்  இந்தான்  நாடாளுமன்ற  இடைத்  தேர்தலில் டிஏபி  பெருந்  தலைவர்  லிம்  கிட்  சியாங்கின்  அரசியல்  செயலாளர்  டயானா  சோப்யா  டாவுட்  வேட்பாளராகக்  களமிறக்கப்படலாம்.  மலாய்க்காரர்  வாக்குகளைக்  கவர்வதற்காக  அவர்  நிறுத்தப்படலாம்   எனக்  கட்சித் தலைமைத்துவ  வட்டாரமொன்று  தெரிவித்தது.

அவரைத்  தவிர்த்து  ஹியு  குவான்  யாவ்,  பேராக்  டிஏஎபி  தலைவர்  இங்கா  கொர்  மிங்-கின்  அரசியல்  தலைவர்  சொங்  ஷே  மின்,  முன்னாள்  ஜாலோங்  சட்டமன்ற  உறுப்பினர்  லியோங்  மீ  மெங்  ஆகியோரின்  பெயர்களும்  வேட்பாளர்  தேர்வுக்  குழுவின்  பட்டியலில்   இருப்பதாகவும்  அது  கூறிற்று.