புக்கிட் குளுகோரில் பரப்புரையைத் தொடக்கியுள்ள சுயேச்சை வேட்பாளர் முகம்மட் நபி பக்ஸ் முகம்மட் நபி சத்தார், தாமான் துன் சார்டோன் வாக்காளர்கள் சிங்கப்பூர் மலாய்க்காரர்கள்போல் நடந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தினார்.
ஏன் அப்படிச் சொன்னார் என்று தெரியவில்லை. அவரும் விளக்கவில்லை.
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம்-அல்லாதாருக்குமிடையில் பாகுபாடு காட்டப்படுவதற்குத் தாம் இடமளிக்கப் போவதில்லை என்றவர் உறுதி கூறினார்.
பச்சை நிற (பாஸ் கட்சியின் நிறம்) துணியால் போர்த்தப்பட்ட லாரி ஒன்றில் இருந்தவாறு பரப்புரையில் ஈடுபட்ட அவர், “அவர்கள் சொல்வதுபோல் நான் அம்னோ உறுப்பினர் அல்ல”, என்றார். ஆனால், பாஸ் தலைவர்கள் அவருக்கும் அந்த இஸ்லமியக் கட்சிக்கும் சம்பந்தமில்லை என்று கூறுகிறார்கள்.
பிச்சை எடுப்பவர்கள் அவர்கள் அல்லவே!