பல இலட்சங்களைச் சுருட்டிய உதயகலாவின் மோசடி

uthayakalaமோசடி ராணி உதயகலா குறித்த பல்வேறு தகவல்களும் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

இலண்டன் அனுப்புவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட உதயகலா பாதிக்கப்பட்ட சிலருடன் ஆரம்பத்தில் கைத்தொலைபேசியில் உரையாடிய சில பதிவுகள் பெறப்பட்டுள்ளன.

இலண்டன் தூதரகத்துக்கு நேர்முகப் பரீட்சைக்கு தோற்றியவுடன் உதயகலா, பரந்தனைச் சேர்ந்த சிவா என்பவருடன் தொலைபேசியில் உரையாடி உள்ளார்.

அப்போது தொலைபேசியில் உதயகலா கதைத்த போது கொழும்பில் உள்ள இலண்டன் தூதரகத்துக்கு அருகாமையில் உள்ள கொமர்சல் வங்கிக்கு சென்று மூன்று இலட்சம் ரூபாவினை போடுமாறு கூறிய வேளை ஒலிப்பதிவு செய்யப்பட்ட விடயங்கள் அங்கே தெளிவாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

அப்பாவித் தமிழ் இளைஞர்களின் பணத்தை சூறையாடிய விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் கையொப்பம் இட்டு இந்தியத் தூதரகத்துக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கடிதங்கள் அனுப்பி வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருக்கும் உதயகலாவிடம் தாங்கள் வழங்கிய இலட்சக்கணக்கிலான பணத்தை பெற்றுத் தருமாறு இந்திய மத்திய, மாநில அரசிடம் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தனுஸ்கா அனுசாந் என்ற போலிப் பெயரில் இலங்கைக் கடவுச்சீட்டுக்களைப் பயன்படுத்தி உதயகலா மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு சென்று வந்துள்ளதாக அறிய முடிகிறது.

இதேவேளை, உதயகலாவிடம் பணத்தை இழந்த இன்னும் பலர் இருப்பதாகவும் நம்பப்படுகின்றது.

uthayakala

இது தொடர்பில் மேலதிக விடயங்கள் தமிழ் சி.என்.என் இல் தொடர்ந்து வெளியாகும்…

பாதிக்கப்பட்டவர்கள், இவர் குறித்த மேலதிக விடயங்களைத் தெரிந்தவர்கள் எம்மோடு தொடர்பு கொள்ளலாம்.

பாதிக்கப்பட்டவர்கள் கையொப்பமிட்டு இந்தியத் தூதரகத்துக்கும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தின் பிரதிகள் இணைப்பு,

IMG_0004

IMG_0005

IMG_0006

TAGS: