அண்மையில் தமது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் உதயகலா இந்தியாவில் தஞ்சமடைந்திருந்தார்.
கடந்த 5ம் திகதி தனுஸ்கோடி பொலிஸார் உதயகலா உள்ளிட்டவர்களை கைது செய்திருந்தனர்.
யாழ்ப்பாணத்தை வதிவிடமாகக் கொண்ட உதயகலா, நபர்களை பிரித்தானியாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதியளித்து பெருந்தொகைப் பணத்தை மோசடி செயதுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சுமார் ஒரு கோடி ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் இந்தியாவிற்கு அறிவித்துள்ளது.
உதயகலா கிளிநொச்சியில் காணப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் கணனி அலுவலகத்தில் கடமையாற்றினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.