முதலில் உங்களைத் திருத்திக் கொள்ளுங்கள்: பெர்சேயைச் சாடினார் அம்னோ தலைவர்

unoதிரெங்கானு  அரசியல்  நெருக்கடிக்குத்  தீர்வுகாண  பண  அரசியல்  சம்பந்தப்பட்டிருக்கலாம்  என்று  கருத்துத்  தெரிவித்த  பெர்சே-யை  அம்னோ  உச்சமன்ற  உறுப்பினர்  சாடியுள்ளார்.

அந்தத்  தேர்தல்  கண்காணிப்பு  அமைப்பு  தகுந்த  ஆதாரமின்றி  இப்படிக்  கருத்துரைக்கக்  கூடாது  என  இப்ராகிம்  அபு  ஷா  கண்டித்ததாக  அம்னோ  அன்லைன்  கூறியது.

“அக்கூற்று  பெர்சேயின்  நியாயமற்ற  ஒருதலைப்பட்சமான கொள்கையைத்தான்  காண்பிக்கிறது.

“பிகேஆர்  கட்சித்  தேர்தலில்  பண  அரசியல்  விளையாடியது  பற்றி  அவர்கள் எதுவும்  சொல்லவில்லையே”,  என்றும்  அவர்  குறிப்பிட்டார்.