அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை கொலை செய்வதற்காக 75 வயது மூதாட்டியை கொன்று காரை திருடிய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா மீது காரை ஏற்றிக் கொலை செய்ய திட்டமிட்டதாக மேக்வே (44) என்ற நபர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து இவரிடம் நடத்திய விசாரணையில், ஒபாமாவை தாக்குவதற்காக அவர் மெபல் என்ற மூதாட்டியை (75) கொலை செய்து அவரிடமிருந்து காரை திருடியது தெரியவந்தது.
இதன்பின் அந்த மூதாட்டியின் காரினை பறிமுதல் செய்த பொலிசார் மேக்வே மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வருகையில், மெக்வே தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு, ஒபாமாவை கொல்ல கார் தேவைப்பட்டதால் அந்த மூதாட்டியை கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
தற்போது வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.