இடைநீக்கம் செய்யப்பட்ட மாணிக்கவாசகம் தேர்தல் போட்டியிட விருப்பம்

manikமுன்னாள்  காப்பார்  எம்பி  எஸ்.மாணிக்கவாசகம்,  பிகேஆரிலிருந்து  இடைநீக்கம்  செய்யப்பட்டிருந்தாலும்  கோலா  சிலாங்கூர்  கிளைத்  தலைவர்  தேர்தலில்  சிலாங்கூர்  மந்திரி  புசார்  அப்துல்  காலிட்  இப்ராகிமை  எதிர்த்துப்  போட்டியிடுவதில்  உறுதியாக  இருக்கிறார்.

இன்று  பிகேஆர்  தலைமையகம்  வந்த  மாணிக்கவாசகம், இடைநீக்கத்துக்கு  எதிராக  முறையீடு  செய்திருப்பதாகக்  கூறினார். அத்துடன்  தேர்தலில்  போட்டியிட  அனுமதிக்க  வேண்டும்  என்றும்  கேட்டுக்கொண்டார்.

காலிட் கோலா சிலாங்கூரில்  பண  அரசியலில்  ஈடுபடுவதாக நாளேடுகளிடம் கூறினார்  என்பதற்காக  மாணிக்கவாசகம்  இடைநீக்கம்  செய்யப்பட்டார்.  ஆனல்,  அவர்  அதை  மறுக்கிறார்.

“ஊழல்  நடப்பதாகச்  சொன்னேன். அது உண்மை.

“ஆனால், காலிட்  பண  அரசியலில்  ஈடுபடுவதாகச்  சொல்லவில்லை.  ஆனால்,  கிளை  உறுப்பினர்  ஒருவருக்கு  ஒரு  கடித  உறை  வந்தது.  அதில்  ரிம500  இருந்தது.  காலிட்டுக்கு  வாக்களிக்க  வேண்டும்  என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது”, என்றாரவர்.