இலங்கைக்கு எதிராக இந்தியாவின் புதிய அரசாங்கம் செயற்படுவதற்கு முன்னர், இலங்கை அரசாங்கம் முந்திக்கொள்ள வேண்டும் என்று ஆங்கில பத்திரிகை ஒன்று அறிவுறுத்தியுள்ளது.
குறித்த பத்திரிகை இன்றைய தமது ஆசிரிய தலையங்கத்தில் இந்த விடத்தை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் இந்திய மத்திய அரசாங்கம் அமைக்கப்படுகிறது.
பாரதீய ஜனதா கட்சியின் பிரதம வேட்பாளர் நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்கிறார்.
மறுபக்கம் 95 சதவீதமான ஆசனங்களைக் கைப்பற்றி, தமிழகத்தின் ராணியாக ஜெயலலிதா தம்மை அடையாளப்படுத்திக் கொண்டுள்ளார்.
இந்த நிலையில் அவர்கள் இருவரும் இலங்கைக்கு எதிராக மிகவும் கடினமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம்.
அதற்குள் நரேந்திரமோடியை சமாளிப்பதற்கான வியூகங்களை இலங்கை அரசாங்கம் தயார்படுத்த வேண்டும் என்று அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.
அவ்வாறு இலங்கை அரசாங்கம் தயாராகாத பட்சத்தில், ரஷ்யாவின் ஜனாதிபதி விளாட்டிமீர் புட்டின், யுக்ரெயின் – கிரைமியாவில் செயற்பட்டதைப் போன்று, ஜெயலலிதாவும், நரேந்திர மோடியும் இலங்கை விடயத்தில் செயற்படும் நிலை ஏற்பட்டுவிடலாம் என்று அந்த பத்திரிகை எச்சரித்துள்ளது.
நாதேறி ஆங்கிளை பத்திரிகைகள் இவளுவுனால் தூங்கிகொண்டு இருந்ததா?????முட்டாள்கள் .
எதை வைத்து செயலலிதாவை நம்புகிறார்களோ தெரியவில்லை
காலம்தான் சொல்லும்
மோடியோ லேடியோ டாடியோ இத்தாலியோ இவர்கள் எல்லாருடையே கொள்கையும் ஒன்றே, இவர்களை நம்பி ஏமார்வது அப்பாவி தமிழனே.
அப்படியென்றால் கிரைமியாவில் புட்டின் செய்தது சரியே! அதையே புதிய இந்திய/தமிழ் நாட்டு அரசாங்கம் செயல் படுத்த வேண்டும்! உலக நாடுகள் தமிழனுக்கு நடந்த அநியாயத்தை தடுக்க வில்லை,ஐநா அமரிக்காவின் கைபொம்மை.3 லட்ச தமிழீழ இன படுகொலைக்கு அமெரிக்க,பிரித்தானிய மற்றும் அதன் கூட்டு பேடி நாடுகளும் பதில் சொல்லியே ஆகா வேண்டும்.
இழந்த அனைத்து தமிழ் நிலங்களுடன் மீண்டும் புதிய தமிழர் நாடு அமைய ஏற்பாடு ஆகட்டும்!
இழந்த அனைத்து தமிழ் நிலங்களுடன் மீண்டும் புதிய தமிழர் நாடு அமைய ஏற்பாடு ஆகட்டும்!
அடாடா! என்னமாய் கற்பனை செய்கிறார்கள்!
இலங்கைக்கு எதிராக மிகவும் கடினமான முன்னெடுப்புகளை மேற்கொள்ளலாம் என்று கூறுவது நல்ல நகைச்சுவை,
ராமஜென்ம பூமி, கிருஷ்னஜென்ம பூமி மற்றும் காசி விவகாரங்களில் தனது சங் பரிவாரங்களை திருப்தி படுத்தவே மோடிக்கு 5 வருடம் போதாது.