ஈழத் தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்து மௌனமாக செயற்படுகிறது என்று இன்னர் சிட்டி பிரஸ் குற்றம் சுமத்தியுள்ளது.
யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை அரசாங்கம் வடக்கு கிழக்கு மக்களுக்கு தடைவிதித்திருந்தது.
இது தொடர்பில் கடந்த வாரம் முழுவதும் பலதடவைகள் இன்னர் சிட்டி பிரஸ் ஐக்கிய நாடுகளின் பேச்சாளரிடம் கேள்வி எழுப்பி இருந்தது.
எனினும் அதற்கு தக்க பதில்கள் எதனையும் அவர் வழங்கி இருக்கவில்லை.
இன்றைய தினமும் அது தொடர்பில் மின்னஞ்சல் வழியாக பேச்சாளரை தொடர்பு கொண்ட போதும் அதற்கும் பதில் கிடைக்கவில்லை.
இலங்கை விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறது? என்று அந்த ஊடகம் கேள்வி எழுப்பியுள்ளது.

























