இலங்கை தொடர்பான இந்தியாவின் வெளிவிவகார கொள்கையில் தமிழ்நாட்டு அரசுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதீய ஜனதா கட்சியின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி, இந்திய ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
நடைபெற்று முடிந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று, ஆட்சியை அமைக்கவுள்ள நிலையில், தமிழக அரசாங்தின் ஆதரவு தேவை இல்லை என்ற நிலை காணப்படுகிறது.
ஆனாலும் இலங்கை தமிழர் விடயம் என்பது, தமிழ் நாட்டு அரசியலிலும், மக்கள் மத்தியிலும் முக்கியத்துவம் பெற்ற விடயமாக காணப்படுகிறது.
இந்த நிலையில் தமிழக அரசாங்கத்தின் ஊடாகவே இலங்கை விவகாரத்தை கையாளும் வகையிலான வெளிவிவகார கொள்கை ஒன்றை பாரதீய ஜனதா கட்சி உருவாக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.
பா.ஜ .க.-வின் தேர்தல் அறிக்கையில் ஈழத் தமிழர், தமிழ் ஈழம் குறித்து ஏதும் பதிவு செய்திருந்தீர்களா ??? கன்னியாகுமரியில் ஒரே ஒரு பா.ஜ.க.- காரர் தருமபுரியில் பா.ம.க. காரர் வெற்றியைப் பெற்றுள்ளர்களே, அவர்களாவது நாடாளுமன்றத்தில் எம்பி, எம்பி பேசுவார்களா ?? அ.தி.மு.க., பா.ஜ.க.,.பா.ம.க. சாயம் விரைவில் வெளுத்துவிடும், அதுவரையில் பொறுத்திருப்போம்!!!
“தகவல்கள் கூறுகின்றன” என்னும் அடிப்படையில் பார்த்தால் நல்ல செய்தி தான். இனி ஜெயலலிதா ஈழப்பிரச்சனையை எப்படி அணுகுவார் என்பதைத் பொறுத்துத்தான் ஒரு நல்ல முடிவு தெரியும். கலைஞர் காலைவாரி விட்டது போல இவரும் செய்வாரா, தெரியவில்லை! பெங்களூரில் உள்ள இவர் மேல் உள்ள உழல் குற்றச்சாட்டை பா.ஜ.கா. எப்படி அணுகும் என்பதைப் பொறுத்துத்தான் ஈழப் பிரச்சனைக்கு ஒரு முடிவு தெரியும்!
ஈழப் பிரச்சனை இவர்களால் விடியப் போவதில்லை. அதற்கு தமிழனே, சூரியனைக் காட்டும் கதிர் வீச்சாக இருக்க வேண்டும். ஆற்றல் நம்மிடம் இருந்து வந்தால், அருள் ஆண்டவனிடம் இருந்து தானே வரும்.
இந்த படத்தை பார்க்கும்போது, மோடி என்னை ஒரு மாதிரியாக பார்த்தார் என்று எதிர்காலத்தில் லேடி கூறும் நிலை வரும் என்றே தெரிகிறது.
இந்த வதங்கிப் போன கிழவியை அவர் பார்த்து என்ன செய்யப் போகிறார் ???
திருடர்கள் முன்னேற்ற கழகம் இத்துடம் சவ பரிசோதனைக்கு அனுப்படும் என்று உறுதியாகிவிட்டது….