இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மலேசிய பொலிஸார் இலங்கை அகதிகளை வேட்டையாடுவதாக மலேசியாவின் உள்ளுர் மனித உரிமைகள் அமைப்பு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது
மலேசிய பொலிஸார், நாட்டின் அதிகாரம் மிக்க அரசியல்வாதிகளின் உத்தரவுகளுக்கு ஏற்ப செயற்படுவதாக சூவாரம் என்ற அமைப்பின் பேச்சாளர் ஆர் தேவராஜன் குற்றம் சுமத்தியுள்ளார்.
மலேசிய அதிகாரிகளால் கடந்த வியாழக்கிழமையன்று மூன்று இலங்கைத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
கிருபநாதன், மகாதேவன் கிருபாகரன் மற்றும் குஸாந்தன் சந்திரலிங்கம் ஆகியோரே கைதுசெய்யப்பட்டவர்களாவர்.
அரசியல் அடைக்கலம் கோரிய இவர்கள் மூவரும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டால் அவர் பாரிய சித்திரவதைக்கு உள்ளாக நேரிடும் என்று தேவராஜன் அச்சம் வெளியிட்டுள்ளார்.
எனவே குறித்த இலங்கையர்களி;ன விசாரணை குடிவரவு சட்டத்தின் அடிப்படையில் நடைபெறவேண்டும் என்று தேவராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இவர்கள் மூவரையும் நாடு கடத்தக்கூடாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையிலும் கோரியுள்ளதாக தேவராஜன் தெரிவித்துள்ளார். -Tamilwin
தலைப்பு குழப்பம் ” இலங்கைத தமிழர்களை மலேசியா போலிஸ் வேட்டை யாடுகிறது” நல்லத தமிழ் வளர்ப்போம் !
வெளிநாட்டுச் செய்தியை அப்படியே எடுத்துப் போட்டிருக்கிறார்கள். இலங்கைத் தமிழர் அப்படித்தான் எழுதுவார்!
தீவிரவாதிகளை கைது செய்வதில் என்ன தவறு? கடந்த வாரம் கூட தீவிரவாத தொடர்புடையே இலங்கை சேர்ந்த ஒரு நபர் கைது செய்யபட்டார் அணைத்து நாளிதழ்களிலும் தலைப்பு செய்தியாக வந்தனவே. அதற்க்கு முந்தின வாரம் 11 மலேசிய நபர்கள் கைது செய்யப்பட்டனர் அப்பெல்லாம் இந்த சுவரம் அமைப்பு உறங்கி கொண்டு இருந்ததா.தீவிர வாத தொடர்புடையே அமைப்புகளுக்கு அதரவு கொடுப்பது கண்டனத்துக்கு உரியது.
நாம் என்ன சொன்னாலும் அம்னோ குண்டர்கள் செவி சாய்க்க போவதில்லை. தமிழ் நாடே இவர்களை எல்லாம் கைவிட்ட போது இவன்களுக்கு என்ன வேர்த்தா வடிகிறது? என் ரத்தம் கொதிக்கின்றது– எத்தனை பேர் கொன்று குவிக்கப்பட்டனர்? எல்லாம் என் கண்முன் தெரிகிறது. என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லையே– எல்லா தமிழர்களும் என் உடன்பிறப்பே. இருந்தும் யாரை நம்புவது என்றே தெரியவில்லை. ஏன் நமக்கு இந்த இழிநிலை?
மலேசியா தமிழர்களை அரசாங்கம் நடத்தும் விதத்தில் ..இது ஒன்றும் புதியது இல்லை ..அனால் பங்கள் தேஷ் ..இந்தோ காரன் எல்லாம் எப்படியும் வாழாலாம் ..உயிர் பிழைக்க வந்த தமிழன் ..வேண்டாம் ….
சோழன் அண்ணா, பங்களாதேசி, இந்தோனிசாயர்கள் இங்கு வந்து உழைக்கின்றார்கள் இந்த இலங்கை காரான் எதாவது வேலை செய்கின்றானா? இல்லை கள்ள நோட்டு அடிப்பது, கள்ள கிரிடிட் கார்ட் அடிப்பது, கள்ள பாஸ்போர்ட் அடிப்பது தான் இவன்களின் வேலை.
@ Rajan
ஒரு சிலர் செய்யும் பிழைகளுக்காக எல்லோரையும் குறை கூறவேண்டாம் …இன்று உலகிலேயே மிகவும் மலிவாக கிடைக்கும் பாஸ்போர்ட் மலேசியன் பாஸ்போர்ட் ..ஐரோப்பா வரும் பங்களாதேஷ் சோமாலியா ,இரான் காரன் உங்கள் பாஸ்போர்ட் உடன் தான் வருகின்றார்கள் மலேசியாவுக்கு படிக்கவரும் ஆப்ரிக்கன் மலேசியாவில் காட்டும் கூத்து பிரசித்தம் ..இதை எல்லாம் மலேசியா போலிஸ் சகித்து கொள்ளும் ????