இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம்?

EU-flagEஇலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டுமென தெரிவித்து ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய தொழிற்கட்சி இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

லண்டனில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவு புலம்பெயர் தமிழர்கள், தொழிற்கட்சியின் உறுப்பினர்களான க்ளவுட் மொராயஸ் மற்றம் கராக் தோமஸ் ஆகியோரை இரகசியமாக சந்தித்துள்ளனர்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக புலம்பெயர் தமிழர்கள்,  குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

பொருளாதாரத் தடை விதிப்பது குறித்த யோசனைத் திட்டமொன்றை ஐரோப்பிய நாடாளுமன்றில் முன்வைப்பது குறித்து தொழிற்கட்சி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

TAGS: